‘இந்தியாவுக்கு வரும் வாய்க்காலை அடைத்தது பூடான்’ - பரிதவிக்கும் அஸ்ஸாம் விவசாயிகள்

0 6870

ட்டுமொத்த இந்தியாவும் கால்வன் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சீனா ராணுவத்தின் அத்துமீறலைக் கண்டித்துக்கொண்டிருக்கும் போது எல்லையில், இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான பூடான் சத்தமில்லாமல் அஸ்ஸாம் மாநிலம், பக்சா மாவட்ட விவசாயிகளுக்குத் நீர் திறந்துவிடும் கால்வாயைச் சத்தமில்லாமல் அடைத்துள்ளது- 

1953 - ம் ஆண்டு பூடானிலிருந்து சிறு கால்வாய்   வெட்டப்பட்டு அஸ்ஸாம் மாநிலம், பக்சா மாவட்டம், 26  கிராமங்களில் உள்ள 60,000 - க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில்  பாசனத்துக்கு நீர் கொண்டுவரப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக பூடான் இந்தக் கால்வாயை அடைத்ததே இல்லை. ஆனால், இப்போது எந்தவித முன்னறிவிப்புமில்லாமல்,  பூடான் அரசு  கால்வாயை மூடி நீரைத் தடுத்துள்ளது.இதனால் பக்சா மாவட்டம் முழுவதும் பாசனதுகு நீரின்றி விவசாய நிலங்கள் தரிசாகும் சூழல் உருவாக்கியுள்ளது.

image

பக்சா மாவட்ட மக்கள் பூடான் அரசிடத்தில் நீர் திறந்து விட கோரிக்கை விடுத்தனர்.  பூடான் அரசு செவிசாய்க்கவில்லை. தற்போது, பக்சா மாவட்ட மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த எழுபது ஆண்டுகளாக பூடான் அரசு திறந்துவிடும் நீரை ஆதாரமாகக் கொண்டே பக்சா மாவட்ட விவசாயிகள் விவசாயம் செய்து பிழைத்து கொண்டிருக்கிறார்கள். 

" எப்போதும்  போலவே இந்த நீரை நம்பி  பயிர்கள் நட்டு உழவ வேலையை தொடங்கினோம். ஆனால், திடீரென்று பூடான் அரசு கால்வாயில் நீர் திறப்பதை நிறுத்திவிட்டது. இது தொடர்ந்தாள் எங்களது வாழ்வில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும்" என்று வேதனையுடன் கூறுகின்றனர் பக்சா மாவட்ட விவசாயிகள்.

ஒவ்வொரு வருடமும் பக்சா மாவட்ட விவசாயிகள் இந்தியா - பூடான் அதிகாரிகளுடன் சம்ட்ராப் ஜோங்கர்,  காலநதிக்குச் சென்று டோங் கால்வாயில் பாசனத்துக்குத் தேவையான நீரைத் திறந்துகொள்வார்கள். ஆனால், இந்த வருடம் கொரோனா நோய்த் தொற்று காரணமாக பூடான் அரசு இந்திய விவசாயிகள் யாரையும் டோங் கால்வாய் திறக்கும் இடத்துக்கு அனுமதிக்கவில்லை.



"திறந்துவிட்டிருந்த டோங் கால்வாயை பூடான் அரசு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஐந்து நாளுக்கு முன்பு மூடிவிட்டார்கள். 70 வருடங்களாகத் திறந்துவிட்ட கால்வாயை கொரோனா பிரச்னையைக் காட்டி பூடான் மூடியிருக்கிறது"  என்கிறார்கள் உள்ளூர் அரசியல்வாதிகள்.

விவசாயிகள், இந்தப் பிரச்னையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஏற்கெனவே, எல்லையில் சீனா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியவை பிரச்னை செய்துவரும் சூழலில் பூடானின் இந்த நடவடிக்கை இந்தியாவைச் சீண்டிப் பார்ப்பதற்காகவே அமைந்திருக்கிறது. இந்தியா உடனடியாகத் தலையிட்டு அஸ்ஸாம் மாநில விவசாயிகளின் பிரச்னையைத் தீர்த்துவைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments